தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு - ரஜினிகாந்த்

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை காணலாம்.

NewsToday
NewsToday

By

Published : Oct 27, 2021, 8:23 AM IST

Updated : Oct 27, 2021, 10:54 AM IST

ஹைதராபாத் : இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்கம், அண்ணாத்த, ஜெயில் டீசர் வெளியீடு, சர்வதேச பல் கருத்தரங்கம், பெகாசஸ் வேவு பார்க்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு, மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் என இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு இதோ.

  1. இல்லம் தேடி கல்வித் திட்டம்:1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ரூ.200 கோடியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் முதலியார் குப்பத்தில் புதன்கிழமை (அக்.27) தொடங்கிவைக்கிறார்.
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  2. தமிழ்நாட்டில் மழை பெய்யும் இடங்கள்:தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
    மழைக்கு வாய்ப்பு
  3. சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கு:கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கு காணொலி (மெய்நிகர்) முறையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாடுகின்றனர்.
    பற்கள் பாதுகாப்பு
  4. பெகாசஸ் இன்று தீர்ப்பு:பெகாசஸ் விவகாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று (அக்.27) தீர்ப்பளிக்கப்படுகிறது.
    உச்ச நீதிமன்றம்
  5. மா.சு. டெல்லி பயணம்:தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் முழுமையான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்களிடம் கோரிக்கை எனத் தெரிவித்த தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி செல்வதாக கூறினார்.
    சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  6. அஞ்சல் குறைதீர் முகாம்:சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.27) காலை 11 மணியளவில் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    தபால்
  7. மின்சார வாகனங்கள் கண்காட்சி:கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மின்சார வாகனங்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
    மின்சார வாகனங்கள்
  8. ஜெயில், அண்ணாத்த டீசர் வெளியீடு:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
    அண்ணாத்த
Last Updated : Oct 27, 2021, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details