தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - சிம்பு

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

Important national events to look for today  நிர்மலா சீதாராமன்  ஜிஎஸ்டி  இன்றைய நிகழ்வுகள்  ஸ்டாலின்  டெல்டா  நரேந்திர மோடி  ஜி-7 உச்சி மாநாட்டில்  கரோனா  வெப்பச் சலனம்  மழைக்கு வாய்ப்பு  ஹாட் ஸ்டார் ஈஸ்வரன்  சிம்பு  மீனவர்கள்
Important national events to look for today நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி இன்றைய நிகழ்வுகள் ஸ்டாலின் டெல்டா நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கரோனா வெப்பச் சலனம் மழைக்கு வாய்ப்பு ஹாட் ஸ்டார் ஈஸ்வரன் சிம்பு மீனவர்கள்

By

Published : Jun 12, 2021, 6:52 AM IST

  1. ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் இன்றும் நாளையும் (ஜூன் 12,13) காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார். இந்த மாநாடு தற்போது பிரிட்டன் தலைமையில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்வது இரண்டாவது முறையாகும். 'சிறப்பாக கட்டமைப்போம்' என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகிறது.
    பிரதமர் நரேந்திர மோடி
  2. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவிரி டெல்டா குறுவைப் பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜூன் 12) தண்ணீரை திறந்துவைக்கிறார்.
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  3. மருந்து பொருள்களுக்கு வரி நீக்கம்?:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு, சேவை வரி கவுன்சிலின் 44ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் இணையமைச்சர் அனுராக் தாகூர், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் மருந்துப் பொருள்கள் மீதான வரியை நீக்க ஆலோசிக்கப்படுகிறது.
    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  4. இத்தாலியிடம் வீழ்ந்த துருக்கி: கரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் தாமதமாகி, தற்போது மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் யூரோ கால்பந்து 2020 போட்டியின் தொடக்க ஆட்டத்தில் துருக்கியை இத்தாலி பந்தாடியது.
    இத்தாலி வீரர்கள்
  5. கரோனா கண்டறியும் முகாம்:சேலம் மாவட்டத்தின் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகள், விழுப்புரம், திண்டிவனத்தில் இன்று காய்ச்சல் மற்றும் கரோனா கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    கரோனா பரிசோதனை
  6. கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு:வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளன. மற்ற மாவட்டங்களில் வடவானிலையை நிலவும். வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மன்னார்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
  7. ஹாட் ஸ்டார் ஈஸ்வரன்:சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த ஈஸ்வரன் திரைப்படம் இன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
    நடிகர் சிலம்பரசன் (சிம்பு)

ABOUT THE AUTHOR

...view details