தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - விஜய் ஹசாரே கோப்பை: இன்று அரையிறுதி

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்

Important national and state's events to look for today, மகா சிவராத்திரி, விசிக தொகுதிகள் இறுதி, திரிணாமுல் தேர்தல் அறிக்கை வெளியீடு, திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு, அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா, விஜய் ஹசாரே கோப்பை: இன்று அரையிறுதி, தஞ்சை பெரிய கோவில் நாட்டியாஞ்சலி
Important national and state's events to look for today, மகா சிவராத்திரி, விசிக தொகுதிகள் இறுதி, திரிணாமுல் தேர்தல் அறிக்கை வெளியீடு, திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு, அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா, விஜய் ஹசாரே கோப்பை: இன்று அரையிறுதி, தஞ்சை பெரிய கோவில் நாட்டியாஞ்சலி

By

Published : Mar 11, 2021, 7:10 AM IST

திரிணாமுல் தேர்தல் அறிக்கை

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது.

மம்தா பானர்ஜி

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆறாம் கட்ட தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முக ஸ்டாலின் 12, 13ஆம் தேதிகளில் நாமக்கல், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா இன்று விவேகானந்தர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்

விசிக தொகுதிகள் இறுதி

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று இறுதி செய்யப்படுகின்றன என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விஜய் ஹசாரே கோப்பை: இன்று அரையிறுதி

டெல்லியில் நடைபெறும் விஜய் ஹசாரே அரையிறுதியின் ஒரு போட்டியில் மும்பை - கர்நாடகா அணியும் மற்றொரு போட்டியில் குஜராத் - உத்தரப் பிரதேசம் அணியும் மோதிகின்றன. இவ்விருப் போட்டிகளும் டெல்லியிலுள்ள வெவ்வேறு மைதானங்களில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

விஜய் ஹசாரே மும்பை கேப்டன் பிருத்வி ஷா

தஞ்சை பெரிய கோவில் நாட்டியாஞ்சலி

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 18வது நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தஞ்சை பெரிய கோவில்

மகா சிவராத்திரி

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அருணாச்சலேஸ்வரர்

ABOUT THE AUTHOR

...view details