- உலகில் மிக நீளமான சுரங்கப்பாதை: மோடி இன்று திறந்துவைப்பு!
உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை
இமாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். அடல் எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சுரங்கப் பாதை 9 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டி முடிக்க 10 ஆண்டு ஆகியுள்ளது.
- திருவனந்தபுரத்தில் இன்றுமுதல் 144 தடை உத்தரவு
கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்றுமுதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- சர்வதேச போராட்ட தினம் இன்று!
போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, சம உரிமைகள் பெற்றிடவும், தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு உலகத் தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக கடைப்பிடிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி, இன்று இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- கட்டப்பாவுக்கு இன்று பிறந்த நாள்!
கட்டப்பாவுக்குப் பிறந்தநாள்
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவருபவர் நடிகர் சத்யராஜ். வில்லத்தனத்திலும் சரி, பஞ்ச் டயலாக்கிலும் சரி நக்கல், நய்யாண்டி, கிண்டல் மூலம் ரசிகர்களின் மனத்தில் தனி இடம் பிடித்தவர். அமாவாசை, கட்டப்பா உள்பட பல்வேறு கதாபாத்திரங்கள் என்றும் பேசுபொருளாக இருந்துவருகின்றன. இன்று சத்யராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- ஐபிஎல் 2020 இன்று: 2 ஆட்டங்கள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ்
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மாலை 7.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் ஆடுகின்றன.
டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்