தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - அதிமுக

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள்
இன்றைய நிகழ்வுகள்

By

Published : Sep 30, 2020, 7:19 AM IST

  • பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று!
    பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப். 30) வழங்கப்பட உள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர யாதவ் காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் இறந்துவிட்டனர். தீர்ப்பை அறிவிக்கும் நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • திடக்கழிவு மேலாண்மை தனியாரிடம் வழங்கும் நிகழ்ச்சி
    திடக்கழிவு மேலாண்மை தனியாரிடம் வழங்கும் நிகழ்ச்சி

திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கும் நிகழ்ச்சி தீவுத்திடலில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், பா. பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

  • பேரவைக்குள் குட்கா எடுத்துவந்தது தொடர்பான வழக்கு விசாரணை
    பேரவைக்குள் குட்கா எடுத்துவந்தது தொடர்பான வழக்கு விசாரணை

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த உரிமை மீறல் விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து கு.க. செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

  • உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை
    உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை

உதவி ஆய்வாளர் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

  • அதிமுக நிர்வாகிகள் நியமனம் வழக்கு: இன்று விசாரணை
    அதிமுக நிர்வாகிகள் நியமனம் வழக்கு: இன்று விசாரணை

அதிமுக கட்சி புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும், நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி சூரியமூர்த்தி தொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

  • ஐபிஎல் 2020 இன்று: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ஐபிஎல் 2020 இன்று: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன. ஆடிய இரண்டு போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் அணி இப்போட்டியிலும் உத்வேகத்துடன் விளையாடும், அதேசமயம் ஆடிய இரண்டில் ஒன்று வென்றுள்ள கொல்கத்தா அணி ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details