தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஸ்வாசம் தயாரிப்பாளரிடம் வாழ்த்து பெற்ற இமான்! - Sathyajotji flims

சென்னை: விஸ்வாசம் பட பாடல்களுக்கு இசையமைத்த டி. இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விஸ்வாசம் தயாரிப்பாளரிடம் வாழ்த்து பெற்ற இமான்
விஸ்வாசம் தயாரிப்பாளரிடம் வாழ்த்து பெற்ற இமான்

By

Published : Mar 25, 2021, 5:35 PM IST

2019இல் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்கள் பட்டியலிலும் இணைந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக அமைந்தன. அதிலும் "கண்ணான கண்ணே" பாடல் தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசத்தை விளக்கும் பாடலாக அமைந்ததுடன், பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

விஸ்வாசம்

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

இந்நிலையில், 67ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைத்த, இசையமைப்பாளர் டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜனை சந்தித்து, இமான் அவரிடம் வாழ்த்து பெற்றார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: 'பெயர் மாற்றத்தால் தேவதைகளின் மாட வெளிச்சம் குறையாது - மாரி செல்வராஜ்'

ABOUT THE AUTHOR

...view details