தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோத சூளைகள் மூடப்படும் - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் - யானைகள்

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Illegal brick kiln closes at elephant corridor
Illegal brick kiln closes at elephant corridor

By

Published : Sep 16, 2022, 10:05 PM IST

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன.

இந்த செங்கற்சூளைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்; அரசின் அனுமதியின்றி செயல்படும் இவற்றை மூட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், செங்கற்சூளைகள் மூடப்பட்ட தடாகம் பகுதிகளில் மண் எடுத்ததால் ஏற்பட்ட குழிகளை மூடவும் உத்தரவிட்டது.

அப்போது குறுக்கிட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கற்சூளைகள் மூட உத்தரவிடப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 17ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வு; முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details