தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது! - cannabis selling two arrested

சென்னை: மாதவரத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவரை கைது செய்து, வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

illegal cannabis selling  cannabis selling two arrested  சென்னையில் கஞ்சா கடத்திய பெண் கைது
cannabis selling two arrested in chennai

By

Published : Dec 4, 2019, 2:06 PM IST

கோயம்பேட்டிலிருந்து மாதவரம் வழியாக ஆட்டோவில் கஞ்சா எடுத்துச் செல்வதாக காவல் துரையினருக்கு ரகசியத் தகவல் கிடத்துள்ளது. அத்தகவலின்பேரில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆட்டோவில் அவ்வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தனர்.

இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோவை காவலர்கள் சோதனை செய்துள்ளனர். சோதனையில் வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

தற்கொலைக்கு தாய் தந்தையே காரணம்... இளம் பெண்ணின் உருக்கமான ஒலிப்பதிவு!

அதன் பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த பிரியலஷ்மி(22), பாடி ராஜா தெருவைச் சேர்ந்த முகமது சம்சுதீன்(36) ஆகியோர் எனவும், அவர்கள் பல நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

என்னது கடன் குடுக்கமாட்டியா? வங்கியினுள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர்! சிசிடிவி காட்சிகள்...

பின்னர் இதுகுறித்து மாதவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆட்டோ, இரண்டு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details