தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணம் மீறிய உறவுக்காக கொடுமைப்படுத்திய கணவர் - புகாரளித்த பெண் காவலர்! - குடும்பத்தை நிலைகுலைத்த வெளி காதல் விவகாரம்

சென்னை: கணவரின் திருமணம் மீறிய உறவை சகித்துக்கொள்ள முடியாத பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் அவரது கணவரும் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

police illegal affair in chennai

By

Published : Nov 20, 2019, 10:01 PM IST

சென்னை ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(37). இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் டில்லிபாபு( 39), மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்தவர், பல குற்றச்சாட்டுக்களால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டில்லிபாபுக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இவ்வேளையில் டில்லிபாபுவுக்கும் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்துத் தெரியவந்ததும் உமா மகேஸ்வரி, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அங்கு விசாரணை நடத்திய காவல் அலுவலர் டில்லிபாபுவையும் ஸ்ரீதேவியையும் எச்சரித்து அனுப்பினர்.

ஃபேஸ்புக்கில் லைவ்-ஆக தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

அதன்பிறகும் இரண்டு பேருக்கும் இடையே தொடர்பு நீடித்துள்ளது. இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். இருவரையும் எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். சில நாட்கள் பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், உமா மகேஸ்வரி மீண்டும் பணிக்குச் சென்றார். அப்போது டில்லிபாபு ஸ்ரீதேவியை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உமா மகேஸ்வரியிடம் தெரிவித்தனர். இது பற்றி டில்லிபாபுவிடம் உமா கேட்டார். இதனால் உமாவை டில்லிபாபு அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். இது குறித்து பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் உமா மகேஸ்வரி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மனைவியை அடித்து கொடுமைப் படுத்தியதற்காக டில்லிபாபுவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணதிற்கு மீறிய உறவு ஒருவர் உயிரை பறித்தது!

இந்நேரத்தில் பெண் காவலர் உமா மகேஸ்வரி நேற்று டில்லிபாபு மீது போடப்பட்டிருந்த வழக்கிற்கான சி.எஸ்.ஆர் நகல் வாங்குவதற்காக தொடர்வண்டி மூலம் வியாசர்பாடி சென்று கொண்டிருந்த போது, சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் மகேஸ்வரியின் கணவர் மீண்டும் அவரது திருமண பந்தத்திற்கு மீறிய உறவான ஸ்ரீதேவியுடன் கொஞ்சலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பால் வியாபாரி வெட்டிக்கொலை - மதுரையில் பயங்கரம்

மனமுடைந்த உமா மகேஸ்வரி, டில்லி பாபுவிடம் பேச சென்ற போது கோபமடைந்த டில்லி பாபு உமா மகேஸ்வரியைத் தாக்கியுள்ளார். உமா மகேஸ்வரி கூச்சலிட, அங்கிருந்து பொது மக்கள் உமா மகேஸ்வரியின் உதவியோடு டில்லி பாபு, அவரது காதலியையும் பிடித்து சென்னை புனித தோமையர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

குடும்பத்தை நிலைகுலைத்த வெளி காதல் விவகாரம் இருவர் கைது

டில்லிபாபுவிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நான்கு நாட்களிலேயே, பிணையில் வெளியே வந்ததும், அந்நாளிலிருந்தே ஸ்ரீதேவியுடன் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. பின் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், டில்லிபாபுவிற்கும் அவரது காதலி ஸ்ரீதேவி மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்ததாக உமா மகேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details