சென்னை: ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப். 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்.