சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி அன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
இந்தச் சூழலில், இளவரசி இன்று (பிப். 5) காலை 11 மணி அளவில் சிறையிலிருந்து விடுதலை ஆகவுள்ளார். இவருக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை, ஏற்கனவே செலுத்தியிருந்தார்.
சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் சிறையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. கரோனா தொற்று குணமடைந்து நிலையில், இளவரசி மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சசிகலா மருத்துவமனையில் இருக்கும்போதே விடுதலைசெய்யப்பட்டார். அவர் தன்னை பெங்களுரூவில் தனிமைப்படுத்திக்கொண்டு, வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகைதரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சசிகலா காரில் அதிமுக கொடி, டிஜிபி.,யிடம் புகாரளித்த அமைச்சர்கள்