பாஜக மூத்தத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
'நீங்க ஓட்டே போடமாட்டீங்க... அமைச்சர் பதவி மட்டும் கேக்குதோ!' - cabinet
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சர் பதவி மட்டும் கேட்பது சரியில்லை என பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இல கணேசன்
அதற்கு அவர், 'இப்போது அமைந்திருக்கும் அமைச்சரவை முழுமையானது இல்லை. இன்னும் சில இடங்கள் பாக்கி உள்ளது. சிறிது கால அவகாசம் எடுத்து முழுமையாக நிரப்புவார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவர் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில் மட்டும் இடம் கேட்பது சரியில்லை' என்றார்.
Last Updated : May 31, 2019, 2:10 PM IST