தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2019, 11:59 AM IST

ETV Bharat / city

சிவசேனாவிற்குச் சரியான பாடத்தை பாஜக கற்றுக்கொடுத்துள்ளது! - ஹெச். ராஜா

சென்னை: மகாராஷ்டிரத்தில் பாஜக பெற்றிருந்த 105 தொகுதிகளை விட சிவசேனா வாங்கியிருந்த 56 தான் பெரியது என்று கூறிய மேதைகளுக்கு, பாஜக ஆட்சியமைத்து சரியான கணக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

ila-ganesan-and-h-raja-

சிட்டி யூனியன் வங்கியின் 116 ஆவது ஆண்டு தொடக்கவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இல.கணேசன், பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கே.டி.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன்,

"மகாராஷ்டிரத்தில் பால்தாக்ரே எந்தக் கொள்கைக்காக செயல்பட்டாரோ, அதற்கு நேர் எதிரான கொள்கையை கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதனால் அம்மாநிலத்தில் நலன் பாதிக்கப்பட்டு ஊழல் மிகுந்த ஆட்சி அமையும் என்ற அடிப்படையில்தான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ் நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஹெச். ராஜா, "மகாராஷ்டிரத்தில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அதற்கு அடுத்தபடியாக இருந்த கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஏன் காங்கிரஸைக் கூட ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாததால் ஜனநாயக ரீதியாக பாஜக தற்போது ஆட்சியமைத்துள்ளது.

1978ஆம் ஆண்டு 37 சட்டப்பேரவையின் முதலமைச்சரான சரத் பவார் பாஜகவை விமர்சிப்பது நியாயமில்லை. பாஜக பெற்றிருந்த 105 தொகுதிகளை விட சிவசேனா வாங்கியிருந்த 56 தான் பெரியது என்று கூறிய மேதைகளுக்கு பாஜக ஆட்சியமைத்து சரியான கணக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது" எனக் கூறினார்.

இல.கணேசன், ஹெச். ராஜா சேர்ந்து கூட்டாக பேட்டியளித்தபோது....

மேலும் படிக்க: பாஜக ஆட்சிக்கு எதிரான சிவசேனாவின் வழக்கு - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details