சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-எம்) அடுத்த இயக்குநராக பேராசிரியர் வி.காமகோடி இன்று (ஜனவரி 10) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்பதவியில் இருந்து வரும் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு பதவி விலகியபின், இவர் பதவியேற்கவுள்ளார்.
சென்னை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் முன்னாள் மாணவரும் பேராசிரியருமான காமகோடி, தற்போது இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி மற்றும் ஸ்பான்சர்டு ரிசர்ச் (ஐசிஎஸ்ஆர்) துறையின் இணைத் தலைவராக உள்ளார். இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'சக்தி' என்ற நுண்செயலியை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.