தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐஐடி மாணவி பாலியல் வழக்கு: இ-மெயில் மூலம் விசாரணை - ஐஐடி மாணவி பாலியல் வழக்கு விசாரணை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவியிடம் காவல் உதவி ஆணையர் இ-மெயில் மூலமாக விசாரணை நடத்தினார்

ஐஐடி மாணவி பாலியல் வழக்கு
ஐஐடி மாணவி பாலியல் வழக்கு

By

Published : Apr 8, 2022, 1:56 PM IST

சென்னை ஐஐடி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியிடம் காவல் உதவி ஆணையர் சுப்பிரமணியன் இ-மெயில் மூலமாக விளக்கங்களை கேட்டார். இதற்கு மாணவி பதிலளித்துள்ளார். இரண்டு மெயில்கள் மூலம் பதிலளித்தாக கூறப்படுகிறது.

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவிக்கு 2017ஆம் ஆண்டு அவருடன் பயின்ற மாணவர்கள் கிங்சோ தேப்ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றனர். முதற்கட்டமாக மார்ச் 28ஆம் தேதி மேற்குவங்கத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவரான கிங்சோ தேப்சர்மா கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:கொடூரமாக இரண்டு குழந்தைகளை கொன்ற தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

ABOUT THE AUTHOR

...view details