சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் கேராளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மனஅழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சகமாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.
இச்சுழலில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் மட்டும் 5 மாணவர்கள் இதேபோல் சந்தேகப்படும்படி மரணித்துள்ளதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இவ்வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு, விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். அஸ்வத்தமன் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அமைப்பு அரசியல் கட்சியை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.