தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புகைப்படங்களை தொட்டு உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி - new technology on touch screen

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புகைப்படங்களின் அமைப்பை தொட்டு உணர உதவும் வகையில், புதிய தலைமுறை தொடு திரை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

புகைப்படங்களின் அமைப்பை உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி
புகைப்படங்களின் அமைப்பை உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி

By

Published : Oct 17, 2022, 6:59 PM IST

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய தொடு திரை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இதன் மூலம் ஒரு பயனர் தொடு பரப்பில் விரல்களை நகர்த்தும் போது புகைபடங்களின் அமைப்புகளை(Texture) உணர முடியும்.

தொடு திரை (Touch display) தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பான இது, இன்டராக்டிவ் டச் ஆக்டிவ் டிஸ்ப்ளேக்காக (iTad) என அழைக்கப்படுகிறது. இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் மிருதுவான விளிம்புகள், சுவிட்சுகள் மற்றும் மிருதுவான மற்றும் கரடுமுரடான கட்டமைப்புகள் போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்க முடியும்.

iTadஇல் நகரும் பாகங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, உள்ளமைக்கப்பட்ட மல்டி-டச் சென்சார் விரலின் இயக்கத்தைக் கண்டறிந்து, மேற்பரப்பு உராய்வானது, மென்பொருள் வழியாக சரிசெய்யப்படுகிறது. 'எலக்ட்ரோடெஷன்' எனப்படும் இயற்பியல் நிகழ்வு மூலம் மின்சார புலங்களைக் கட்டுப்படுத்துவதனால், தொடுதிரையில் விரல்கள் பயணிக்கும்போது மென்பொருள் அமைப்புகளின் உராய்வை உணர செய்கிறது.

iTad என்பது பல்வேறு பயன்பாடுகளுடன் கூடிய பல்துறை தீர்வாகும். iTad மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு டெக்ஸ்ச்சர் எஃபெக்ட்டும் விரலின் ஸ்வைப் மூலம் உணர முடியும், என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படிங்க:நிலத்திற்கு அடியில் இயற்பியல் ஆய்வகம் - தென் கொரியா புதிய முயற்சி

ABOUT THE AUTHOR

...view details