2018-19 கல்வியாண்டுக்கான ஐஐடி வளாக வேலைவாய்ப்பு முகாமில் ஏறக்குறைய 964 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றனர். வேலை வாய்ப்பிற்காக மொத்தம் 1300 மாணவர்கள் பதிவு செய்தனர். இந்த 964 எண்ணிக்கையானது இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகமாகும்.
ஐஐடி சென்னை, நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்க்கிங் ப்ரேம்ஒர்க் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இந்தியா ரேங்க்கிங் 2019ல் தொடர்ந்து இந்தியாவில் நான்காவது ஆண்டாக என்ஜீனியரிங் கேட்டகிரியில் முதல் இடத்தை பெறுவதற்கு முக்கிய பங்களிப்புகளில் கிராஜூவேஷன் அவுட்கம் ஸ்கோரும் ஒன்றாகும். இதில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் உள்ளடங்கியுள்ளது.
ஐஐடி சென்னை மாணவர்கள் 2018-19ஆம் ஆண்டுக்காக பதிவு செய்திருந்த 298 கம்பெனிகளிலிருந்து மொத்தமாக 1,146 வேலைவாய்ப்பு அனுமதி கடித்தை பெற்றனர். இதில் 21 சர்வதேச வேலைவாய்ப்புகளும் உள்ளடங்கும். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் துறை வாரியான ஒட்டுமொத்த கோர் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறைகள் முன்னணி வேலைவாய்ப்புகளில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான முதல் 5 வேலைவாய்ப்புகள் மைக்ரான் – 26 ஆஃபர்கள், இன்டெல் இண்டியா டெக்னாலஜி பி.லிட் – 26 ஆஃபர்கள்,சிட்டிபேங்க்- 23 ஆஃபர்கள், மைக்ரோஸாஃப்ட்- 22 ஆஃபர்கள்,குவால்காம்-21 ஆஃபர்கள் என இந்த ஆண்டில் மொத்தம் 51 ஸ்டார்ட் அப்சும் பிளேஸ்மன்ட்டில் பங்கேற்றன.
அவை வழங்கிய மொத்தம் 121 அனுமதி கடிதங்களில் 97 கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஸ்டார்ட்அப் ரெக்ரூமெண்ட்டில் முன்னணி துறைகள் IT 21 விழுக்காடு மற்றும் அதற்கடுத்து அனலிடிக்ஸ் 16 விழுக்காடு ஆகும்.