சென்னை: ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் நெட்வொர்க்கில் ஐஐடி மெட்ராஸ் இணைந்துள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிஸ்டம், ஐபிஎம்-ன் குவாண்டம் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கான கிளவுட் அடிப்படையிலான இணைப்பு ஐஐடி மெட்ராஸ்-க்கு கிடைக்கும். இதன் மூலம் நடைமுறைப் பயன்பாடுகளை ஆராயவும், வணிகம் மற்றும் சமுதாயத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த நன்மைகளை உணரச் செய்யவும் முடியும். குவாண்டம் இயந்திரக் கற்றல், குவாண்டம் மேம்பாடு, நிதி தொடர்பான பயன்பாட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட ஆராய்ச்சிப் பணிகளில் முக்கிய வழிமுறைகளை முன்னெடுக்க ஐஐடி மெட்ராஸ் கவனம் செலுத்தும்.
ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் நெட்வொர்க்கில் இணைந்த ஐஐடி மெட்ராஸ் குவாண்டம் வழிமுறைகள், குவாண்டம் இயந்திரக் கற்றல், குவாண்டம் பிழை திருத்துதல் மற்றும் பிழைகளைக் குறைத்தல், குவாண்டம் டோமோகிராபி, குவாண்டம் வேதியியல் போன்ற அம்சங்களில் ஐபிஎம் குவாண்டம் சேவையுடன், ஓபன் சோர்ஸ் முறையிலான கிஸ்கிட் (Qiskit)கட்டமைப்பையும் ஐஐடி மெட்ராஸ் பயன்படுத்திக் கொள்ளும். நாட்டில் குவாண்டம் கம்ப்யூட்டிங் சுற்றுச்சூழலை மேம்படுத்தி வளர்க்கும் பணியில் ஈடுபடும்.குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சியை இந்தியாவிற்கு பொருத்தமாக உள்ள களங்களில் ஐஐடிமெட்ராஸ்ஆராய்ச்சியாளர்கள்மேற்கொள்ளும்வகையில் ஐபிஎம் ரிசர்ச் இந்தியா தனது ஆதரவை வழங்கும்.
இந்தக் கூட்டுமுயற்சிபற்றிப் பேசிய ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “குவாண்டம் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் ஐபிஎம் உடன் கூட்டுச் சேருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். என்பிடெல்-ன் கீழ் குவாண்டம் தொழில்நுட்பங்கள் பற்றிய பாடத்திட்டத்தை எங்கள் ஆசிரியர்களும், ஐபிஎம் நிபுணர்களும் இணைந்து ஏற்கனவே கற்பித்து வருகிறோம். இந்த உறவை மேலும் உயரத்திற்குக்கொண்டுசெல்ல நாங்கள் திட்டமிட்டுஉள்ளோம். ஐஐடி மெட்ராஸ்-ல் ஐஐடிஎம்-ஐபிஎம் குவாண்டம் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்குவது எங்கள் நோக்கமாகும்" எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் மின் பொறியியல் துறை பேராசிரியர் அனில் பிரபாகர் கூறுகையில், "குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சிக்கான அதிநவீனப் பகுதியாக இருந்து வருகிறது. பாதுகாப்பான குவாண்டம் தொடர்பு, குவாண்டம் உணர்தல் மற்றும் அளவியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் தகவல் கோட்பாடு உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பங்களின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதில் CQuICC,ஐஐடி மெட்ராஸ் கவனம் செலுத்துகிறது.
உலகின் உண்மையான பிரச்சனைகளுக்கான புதிய குவாண்டம் வழிமுறை மற்றும் பயன்பாடுகள் குறித்து ஐஐடி மெட்ராஸ் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனை தொழில்துறையின் ஆதரவுடனும்,எம்பாசிஸ், எல்டிஐ, கே.எல்ஏ., தேசிய மற்றும் சர்வதேச கல்வி கூட்டாண்மைகள் உள்ளிட்ட CQuICC-யின் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ள இந்த தொழில்-கல்வித்துறை கூட்டமைப்பு வழிவகை செய்துள்ளது. ஐபிஎம் குவாண்டம் நெட்வொர்க் உடனான இந்த கூட்டுமுயற்சி எங்கள் மையத்திற்கு உற்சாகமான புதிய கட்டமாக விளங்குகிறது. கடந்த ஆண்டுக்கான குவாண்டம் கம்ப்யூட்டிங் கல்வியில் எங்களின் வெற்றிகரமான ஒத்துழைப்பை இது உருவாக்கியதுடன், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் புதிய வழிகள் மற்றும் திசைகளைக் காட்டுவதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் 180-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐபிஎம் குவாண்டம் நெட்வொர்க்-கில் இணைந்துள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கை முன்னெடுக்கவும், நடைமுறைப் பயன்பாடுகளைக் கண்டறிவதற்காகவும்பார்ச்சூன்-500 நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் போன்றவை ஐபிஎம் குவாண்டம் நெட்வொர்க் என்ற உலகளாவிய சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. நிதி, ஆற்றல், வேதியியல், பொருட்கள் அறிவியல், உகப்பாக்கம் மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சாலைகளுக்கும், பிற நிறுவனங்களுக்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என ஐபிஎம்குவாண்டம் குழுவும் அதன் உலகளாவிய சுற்றுச்சூழல் நெட்வொர்க் அமைப்புகளும் ஆராய்ந்து வருகின்றன.
இதையும் படிங்க:இந்திய கடற்படையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் அறிமுகம்