தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுத் திட்டம்!

இந்தியத் தொழில்நுட்பக்கழகம் (சென்னை , IIT Madras) தனியார் வங்கித் துறை திறன்வளர்ப்புப் பயிற்சி மையத்துடன் (INFACT PRO TRAINERS) இணைந்து திறன்கல்விப் பயிற்சியை வழங்குகிறது.

By

Published : Nov 19, 2020, 3:03 PM IST

IIT Madras Digital Skills Academy
IIT Madras Digital Skills Academy

சென்னை: தனியார் வங்கித் துறை, பொருளாதார அடிப்படையிலான திறன்கல்விப் பயிற்சியை ஐஐடி மெட்ராஸ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயனர்களுக்கு அளிக்கவுள்ளது.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் தொடர்கல்வித்துறை எண்முறைத் திறன் கலைக்கூடம் (Digital Skills Academy) என்ற ஓர் அமைப்பினை உருவாக்கியுள்ளது. இந்தக் கலைக்கூடம் இந்தியத் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓர் அங்கமான NASSCOM IT-ITeS -இன் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்தக் கலைக்கூடமும், வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சார்ந்த பணிகளுக்குத் தேவைப்படும் திறன்களை ஊக்குவிக்கும் தனியார் திறன்மேம்பாட்டு மையம் INFACT PRO TRAINERS -ம் இணைந்து வங்கி (Banking), பரஸ்பர நிதி (Mutual Funds), வங்கித்துறை பாதுகாப்பு மேலாண்மை செயல்பாடுகள் (Security Operations and Risk Management), பங்கு பங்குகள் (Equity Derivatives), என்ற பல பாடங்களை கடந்த ஒரு மாதமாக அளித்து வருகின்றன.

கல்லூரிகளில் பட்ட, உயர் பட்டபடிப்பில் தொடரும் மாணவ மாணவியருக்கு பல்வேறு தேர்வு பயிற்சிகளும், திறன்மேம்பாடும் அளிக்க வேண்டும் என்பது இந்த முயற்சியின் முதற்குறிக்கோள். அத்துடன் வங்கிப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தினர் என்ற பலவகையினரும் மேற்கொண்டு திறம்பட பணியாற்றவும், சார்ந்த துறைகளில் வணிகம், வங்கித் தொழில் பற்றி நன்கு அறிந்து கொள்ளவும் இப்பாடங்களும், பயிற்சி முறைகளும் மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள விரும்புவோர் https://skillsacademy.itm.ac.in | mangalam.ac.in என்ற இரு இணையதளங்கள் அல்லது mangalas@dth.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் கேட்டுப்பெறலாம்.

இந்தப் பயிற்சிமுறையின் தொடக்கவிழா சென்ற மாதம் மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி இணையதளம் மூலம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஆனந்த், தற்போதைய இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, இந்தியாவின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Cognizant Technology Solutions என்ற தனியார் நிறுவன நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான லட்சுமிநாராயணன், ஆகியோர் பங்கேற்றனர்.

தொழில்நுட்பக் கழகத்தின் மேலாண்மை ஆய்வுத்துறையின் தலைசிறந்த பேராசியர்களில் ஒருவருமான திருமதி தேன்மொழி, சிறப்புரையாற்றினார். அனைவரும் இம்முயற்சி வெகுவாகப் பாராட்டியதோடு, இதுபோன்று தொழில்நுட்பவழி, இணையதளம் மற்றும் திறன் முறைப் படிப்பு மூலம் தற்கால இந்திய இளைய சமுதாயம் வருங்காலத்தில் உலகின் இணையற்ற முன்னோடிகளாக மாற உதவுவது உயர்கல்வித் துறைப் பல்கலைக்கழகங்களுக்கும், தனியார் துறைக்கும் முக்கியக் குறிக்கோளாக வேண்டும், அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மேலும் பிற நிறுவனங்களில் தற்போது பணியாற்றிவரும் அனைவருக்கும் இணையதளம் மூலமாக மாற்றுத்திறன்களை வளர்த்துக் கொள்ள இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

பேராசியர் தேன்மொழி, இந்தத்திட்டத்தின் பிரதான ஆலோசகராக உள்ளார். INFACT PRO TRAINERS நிறுவனரும் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உயர்பதவிகளில் திறம்படச் செயலாற்றி மிகுந்த பாடத்திட்டங்களைத் அனுபவமும் தயாரித்துள்ளார். முனைவர் பாலாஜி ஐயர் அவருடைய உரையில், மாணவ மாணவியர்களுக்கு தேர்வுப் பயிற்சிகளையும், வினாவிடை வடிவத்தில் மாதிரித் தேர்வுகள் பலவற்றையும் இணைய தளத்தில் தர உள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் பயிற்சியின் மூலமாக தற்போது நிலவிவரும் நிறுவன சூழல்களையும் பணிசார்ந்த தேவைகளையும் கலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இதனால், பயிற்சிக்கும் பணிக்கும் உள்ள இடைவெளி முழுமையாக நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம். கணினி செயற்கை நுண்ணறிவு தளமாக (Artificial Intelligence Platform) இந்த இணையதளம் மாணவ மாணவியர்களை வங்கித் துறைச் சார்ந்த பணிகளுக்குத் தயார் செய்யும் ஊன்றுகோலாக அமையும் என்றார்.

இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இரசாயனத்துறையின் தலைவரான பேராசிரியர் மங்களசுந்தர், கலைக்கூடத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர், தேசியக்கல்வி அமைச்சகம் நடத்திவரும் தேசியத் தொழில்நுட்பவழிக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் (National Programme on Technology Enhanced Learning, NPTEL) ஒருங்கிணைப்பாளராகவும், நேரடித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்களை ஒளிபரப்பி வரும் DTH SWAYAM Prabha என்ற அமைப்பிற்கும் தற்போதைய பொறுப்பாளராகவும் உள்ளார்.

பல ஆண்டுகள் இணையதளக் கல்வி முறைகளில் பயிற்சி தலைமைப் அனுபவமுள்ள அவர், மத்தியத் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தகவல் தொழில்நுட்ப அமைப்பான NASSCOM IT-ITeS இன் கல்வித்துறை ஆலோசகராகவும் உள்ளார். திறன் மேம்பாட்டுக் கலைக்கூடத்தின் பணிகளை அவர் நேரடியாக கவனித்து மாணவ மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று கூறினார்

கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவ மாணவியரை ஒரு குழுமமாகப் பதிவு செய்து தனிப்பட்ட கவனத்துடன் பயிற்சி அளிக்க வசதிகள் உண்டு. மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள, மின்னஞ்சல் முகவரிகளைக் குறித்துக் கொள்க.

ABOUT THE AUTHOR

...view details