தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஐஐடி, ஹெலிக்சான் இணைந்து உருவாக்கியுள்ள ரிமோட் நோயாளி கண்காணிப்பு தீர்வு!

By

Published : Aug 4, 2020, 3:47 PM IST

சென்னை ஐஐடி மற்றும் ஹெலிக்சான் (HELYXON) கோவிட் நோய் தீர்வுகளுக்காக, இந்நோய் தாக்கியவர்களை கண்காணிக்கும் நோக்கில் ரிமோட் நோயாளி கண்காணிப்பு தீர்வுகளை உருவாக்கி அதை செயலாக்கத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது.

HELYXON develop
HELYXON develop

சென்னை:சென்னை ஐஐடியின் ஹெல்த்கேர் டெக்னாலஜி இன்னோவேஷன் சென்டர் (HTIC, சென்னை ஐஐடி அராய்ச்சி பூங்காவின் ஓர் மருத்துவ தொழில் முனையும் நிறுவனமான ஹெலிக்சான், ஆகியவை ஒன்றிணைந்து கோவிட் நோய்க்காக உருவாக்கியுள்ள ரிமோட் நோயாளி கண்காணிப்பு தீர்வுகளை வெற்றிகரமாக செயல்டுத்தி ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சாதனம் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கும் இதன் வகையிலேயே முதலாவதாகும். இது உடல்சூடு, ரத்தத்தின் காற்று அளவு, சுவாச அளவு மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றை மிகத் துல்லியமாக தொடர்ந்து கண்காணிக்கிறது.

கோவிட்-19: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள் ஏற்றுமதி!

இந்த சாதனம் ஏற்கனவே அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 5,000 சாதனங்களை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

நோயாளி கண்காணிப்பு தீர்வு

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும் இதன் தேவையை கருத்தில்கொண்டு உற்பத்தி விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ. 2,500 முதல் ரூ.10,000 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் முற்றிலுமாக தன்னிறைவையும், பிற தேவையில்லாமல் தனித்து செயல்படக்கூடியதுமாகும், இது எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருக்கிறது

ஹெலிக்சான் இணைந்து உருவாக்கியுள்ள ரிமோட் நோயாளி கண்காணிப்பு தீர்வு

வயர்லஸ் மூலம் நோயாளியின் விரலிலேயே பொருத்தக்கூடியதாகும். இதன் தரவுகளை கைபேசி அல்லது கணினியில் சேமித்து அறிந்துகொள்ள முடியும் என்பது கூடுதல் அம்சமாகும்.

ABOUT THE AUTHOR

...view details