சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் இணைந்து, உலக நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கு உதவும் ஆராய்ச்சி கூட்டுறவை மேற்கொண்டுள்ளன. இதன் நான்கு ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒவ்வொரு நிறுவனமும் கூட்டு நிதியிலிருந்து ஆண்டுக்கு AU$50,000 முதலீடு செய்ய உள்ளன. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எரிசக்தி தொடர்பான துறைகளில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்த இரு நிறுவனங்களின் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவதை இந்த கூட்டாண்மை ஏற்படுத்தும். ஆற்றல், சேமிப்பு, மாற்றம், சூரிய உப்புநீக்கம், குளிர் சேமிப்பு, மின்வேதியியல், எரிவாயு விசையாழிகள், மைக்ரோ-கிரிட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் உள்ளிட்டவையின் கீழ் அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இவ்வாராய்ச்சிக்கு ஒத்துழைப்பார்கள்.
சென்னை ஐஐடி உடன் சிட்னி பல்கலைகழகம் கைகோர்ப்பு
சர்வதேச எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள சென்னை ஐஐடி மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (செப்.9) சென்னை ஐஐடி வளாகத்தில் அதன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் சிட்னி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தலைவருமான பேராசிரியர் மார்க் ஸ்காட் மற்றும் துணைத் துணைவேந்தர், ஆராய்ச்சி பேராசிரியர் எம்மா ஜான்ஸ்டன் ஆகியோரால் கையெழுத்தானது. இதுகுறித்து பேராசிரியர் மார்க் ஸ்காட் கூறுகையில், "இந்தியாவுடனான சிட்னி பல்கலைக்கழகத்தின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும், ஆஸ்திரேலியா-இந்தியா தலைமைத்துவ உரையாடலில் பங்கேற்கவும் இந்தியா வந்துள்ளோம். சென்னை ஐஐடி உடனான கூட்டாண்மை, இந்தியாவிற்கான பல்கலைக்கழகங்களின் அர்ப்பணிப்பையும், உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீ-சர்ட் விலை குறித்து விமர்சித்த பாஜக!