தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழிசை தமிழக ஆளுநராகிருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் - திருமாவளவன் - தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநர்

சென்னை: தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan

By

Published : Sep 2, 2019, 9:47 AM IST

Updated : Sep 2, 2019, 9:55 AM IST


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆள்கின்ற பாஜக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல, உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவது, இந்தியாவிற்கு இந்து ராஷ்டிரீயம் என்று பெயர் சூட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸின் கனவுத் திட்டங்களை செயல்படுத்துவார்கள். அதற்கு அரசியல் சாசன சட்டம் இடையூராக இருந்தால் அதையும் மாற்றுவார்கள் என்று விமர்சித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தமிழ்நாட்டின் தொழில்வளத்தை மேம்படுத்துவதைக் காட்டிலும் பன்னாட்டு நிறுவனங்களின் உலகமயமாக்கும் கனவை நிறைவேற்றும். மேலும் தமிழ்நாட்டின் சிறு குறு முதலீட்டாளர்கள் நசுக்கப்படுவார்கள். இதன் மூலம் அந்நிறுவனங்கள் மென்மேலும் வலிமைபெருமே தவிர அது நம் மாநிலத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தாது என்றார்.

தொல். திருமாவளவன் பேட்டி

மேலும் பேசிய அவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக உயரிய பதவி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்ற அவர், தமிழிசை தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று கூறினார்.

Last Updated : Sep 2, 2019, 9:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details