தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தேவைப்பட்டால் பாஜக தனித்து போட்டியிடும்' - தமிழிசை - alliance

சென்னை: "தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தால் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும்" என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

By

Published : Feb 13, 2019, 8:01 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,


தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடுவார்கள். எனினும் பிற கட்சிகள் தனித்து போட்டியிட்டால், பாஜகவும் தனித்து போட்டியிடும்.



தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுடன் தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டியிருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை முழுவதுமாக முடிந்த பின்பு தான் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.

சமூகவலைதளத்தில் யாரோ ஒருவர் பதிவிடுவதை எல்லாம் வைத்து என்னால் பதில் சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்பது வேறு சமூகவலைதளம் என்பது வேறு.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணாவை விட்டுவிட்டு தமிழகத்தின் பிரச்சினைகளை பர்ப்போம், பிறகு புதுச்சேரி பற்றி பார்ப்போம், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details