தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்! - டிஎன்பிஎஸ்சி முறைகேடு ஆளுநரிடம் மனு அளிக்க திட்டம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சிபிசிஐடி சரியாக கையாளவில்லை எனில் சிபிஐ விசாரிக்க வேண்டுமென தமிழ்நாடு ஐஏஎஸ் அகாடமிகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு ஆளுநரிடம் மனு அளிக்க திட்டம், ias academy association to file petition against tnpsc exam scam
தமிழ்நாடு ஐஏஎஸ் அகாடமிகளின் கூட்டமைப்பினர் பேட்டி

By

Published : Jan 29, 2020, 10:04 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஐஏஎஸ் அகாடமிகளின் செயலாளர் தமிழ் இயலன், “ராமேஸ்வரம், கீழக்கரைப் பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேடு தற்போது வெளிவந்துள்ளது. முறைகேட்டில் கீழ்நிலையிலுள்ள அலுவலர்கள் மட்டுமே களை எடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் மேல்நிலையில் உள்ளவர்களையும் விசாரணை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேட்டில் தவறு செய்த மேல்நிலையில் உள்ள ஊழியர்களையும், அலுவலர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு போன்று குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தவறு செய்தவர்களை தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு வராது என அமைச்சர் கூறியுள்ளதை வரவேற்கிறோம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளரிடம் சிபிசிஐடி விசாரணை

முறைகேடுகளில் தலைமறைவாக இருந்து வரும் ஊழியர்களை வைத்துக்கொண்டு, அடுத்து வரும் தேர்வுகளை நடத்தாமல் 15 நாட்களுக்குள் விசாரணையை முடுக்கிவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு - திடுக்கிடும் தகவல்கள், 3 பேர் கைது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள அலுவலர்களையும், உறுப்பினர்களையும் தமிழ்நாடு ஆளுநர்தான் நியமிக்கிறார். எனவே இதில் அவர் கவனம் செலுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். குரூப்-1 தேர்வு முறைகேடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அது குறித்தும் விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரூப் -1 தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை - தேர்வர் அர்ச்சனா தகவல்

சில அரசு அலுவலர்கள், சில பயிற்சி நிறுவனங்களோடு தொடர்பிலிருந்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் உயர்மட்டத்தில் தொடர்புடைய அலுவலர்களையும் விசாரணை செய்ய வேண்டும். தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டுமென மனு அளித்துள்ளோம்.

‘தமிழர்களின் வேலை தமிழர்களுக்கே’ - மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மத்திய அரசு தேர்வுகளைபோல் இணையவழியில் நடத்த வேண்டும். இணையவழித் தேர்வினை சாதாரணமாக கைப்பேசிகளை பயன்படுத்துபவர்களும் எழுத முடியும். இதுபோன்ற முறையில் தேர்வு நடத்தினால் முறைகேடுகள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்கலாம்” என்றார்.

தமிழ்நாடு ஐஏஎஸ் அகாடமிகளின் கூட்டமைப்பினர் பேட்டி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details