சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது,திமுக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி. ஆர். பி. ராஜா எழுப்பிய கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலளித்தார்.
நியாய விலை கடைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பெரியசாமி - i periyasamy answer for T R B Rajaa
நியாய விலை கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
![நியாய விலை கடைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பெரியசாமி நியாய விலை கடைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15086787-thumbnail-3x2-tn-assambly-trpraja-periyasamy.jpg)
அப்போது, “ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறையில், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அதிவேகமாக செயல்பட்டு வருவதாக” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உதயநிதி