சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை வழங்கியதற்கு இடைக்கால பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.
சாமானியனுக்கும் பதவி வழங்குவது அதிமுகவில் மட்டும் தான் நிகழும். கடந்த ஒரு ஆண்டாக சட்டப்பேரவையில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் எதிர்த்து வருகிறார். இனிவரும் காலங்களிலும் திமுக அரசு செய்துவரும் குளறுபடிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வரலாற்று வாய்ப்பை தந்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.