சென்னை:சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் (Hyundai Motor India Foundation) சார்பில் 1000 பேருக்கு வழங்கும் வகையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் ரமேஷ், "மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தொடர்ந்து நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 பேருக்கு வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நிவாரண பொருள்கள் வழங்கல் இந்நிலையில் நேற்று (நவம்பர் 22) சென்னை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளோம், விரைவில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இந்த உதவிகள் வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள், போர்வைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதில் மொத்தம் நான்கு மாவட்டங்களில் நான்காயிரம் குடும்பங்களுக்கும், ஹுண்டாய் நிறுவனத்தைச் சுற்றியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள் என மொத்தம் ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு இந்த மழை வெள்ள பாதிப்புக்குள்ளான நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா!