தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 82.5 லட்சம் வழங்கிய மத்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள்! - முதலமைச்சர் நிவாரண நிதி

சென்னை: மத்தியப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியமான 82.5 லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சர் பாண்டியராஜனிடம் வழங்கினர்.

fund
fund

By

Published : May 2, 2020, 7:30 PM IST

ஆவடியில் செயல்பட்டு வரும் மத்தியப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான, கனரக வாகன தொழிற்சாலை (HVF) (66,67,470 ரூபாய்), மற்றும் திண் ஊர்தி தொழிற்சாலை (EF) (15,85,000 ரூபாய்) ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியப்பணம் 82,52,470 ரூபாயை, கரோனா தடுப்புப் பணிக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று வழங்கினர்.

இதனைப் பெற்றுக்கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மேலும் ஆவடி தனியார் அமைப்பினர் அளித்த ரூபாய் 2.60 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 85,12,470 ரூபாயை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.82.5 லட்சம் வழங்கிய மத்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள்!

இதையும் படிங்க: கோவிட் - 19: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவில் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details