சென்னை, வில்லிவாக்கம் திருவெங்கையா தெருவைச் சேர்ந்தவர் கிரிதரன் (22). இவருக்கு ஹரிதா (22) என்ற மனைவியும், இரண்டரை வயதில் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வந்த கிரிதரனுக்கு ஹரிதா சாப்பாடு போட்டுக் கொடுத்துள்ளார். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் கணவனின் தட்டிலிருந்த உணவை எடுத்து ஹரிதா குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த கணவன்
இதனால், ஆத்திரமடைந்த கிரிதரன், ஹரிதாவை ஆபாசமாகத் திட்டி தாக்கியுள்ளார். இதில் ஹரிதாவுக்கு பலத்த காயமடைந்து பற்கள் உடைந்தன. தொடர்ந்து அச்சமுற்ற ஹரிதா, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் வில்லிவாக்கம் காவல் துறையினர் கிரிதரன் மீது பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டுதல், காயப்படுத்துதல், மிரட்டல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.