சென்னை போரூர் பாலமுருகன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜ் (30). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (29) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகிய நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமாகியதை அறிந்த அவர், திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
பின்னர், சமரசம் செய்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் பிப்ரவரியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு ஆனந்த்ராஜ் தொழில் தொடங்க போவதாகக் கூறி, மனைவி பாக்கியலட்சுமியிடம் 10 லட்சம் ரூபாயை உனது தந்தையிடம் பெற்று தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் பணம் கிடைக்கத் தாமதமாகும் என ஆனந்த் ராஜிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர் பாக்கியலட்சுமியை சாதிப் பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டி வந்துள்ளார்.