தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடும்பத் தகராறு - மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் - மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன் கைது

சென்னை ஏகாட்டுரில் குடிபோதையில் மனைவியை கணவன் கத்தியால் தாக்கியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெரினா
மெரினா

By

Published : Jan 31, 2022, 7:17 AM IST

சென்னை: திண்டிவனத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவரது மனைவி மணிமேகலை(27). இவர்கள் இருவரும் திண்டிவனத்தில் வசித்து வந்தனர்.

இந் நிலையில் கிருஷ்ணமூர்த்தி தினமும் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவாது மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று கண்ணகி நகரில் வசித்து வருகிறார்.

செல்போன் அழைப்பு

சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலை ஏகாட்டுரில் மால் ஒன்று உள்ளது. அங்கு மணிமேகலை பணியாற்றி வருகிறார்.

இதனிடையே கணவர் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி மணிமேகலையை தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். இருப்பினும், அந்த அழைப்புகளை மணிமேகலை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

கத்திக்குத்து

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மனைவி பணிபுரியும் இடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், மணிமேகலை கிருஷ்ணமூர்த்தி உடன் செல்வதற்கு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்து மதுபோதையிலிருந்த கிருஷ்ணமூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையின் கையில் வெட்டியுள்ளார்.

பின்னர் மணிமேகலையுடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாலில் இருந்த பார்வையாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணை

பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் மயங்கிய நிலையிலிருந்த மணிமேகலையை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் பங்கீட்டுப் பிரச்னை; அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details