சென்னை: குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டை பிள்ளையார் கோயில் 1ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம்(59), மஞ்சுளா(50) தம்பதிக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். அதில் மூத்த மகள் வசந்தி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, மோசஸ் என்பவருடன் உறவில் இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில் மோசஸ் மதுஅருந்திவிட்டு வசந்தியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வசந்தி மோசஸை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தன்னுடன் வாழவில்லை என்றால் உன்னுடை தாய், தந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.