அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஜூன் 30ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காக மக்கள் யாரும் வெளியே அநாவசியமாக சுற்றக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் தி.நகர் சாலையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த சேகர் என்ற முதியவருக்கு ரூ.100 அபராதம் வசூலித்து, மாநகராட்சி அலுவலர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதேபோல், கரோனாவின் தீவிரத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. முழு ஊரடங்கை மீறியதாக இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட ரசீது ஊரடங்கு காரணமாக சாலை, பூங்காக்களில் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைப்பயிற்சி உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஊரடங்கு மீறல்: 33 ஆயிரம் வழக்குகள் பதிவு!