தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கிலும் உணவு... நல்லுள்ளங்களை வாழ்த்தும் தெரு நாய்கள்! - தெருநாய்கள்

சென்னை: வருமானமற்ற ஊரடங்கு காலத்திலும் உணவின்றி பசியால் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் உயிர்நேயம் கொண்டோர் பற்றிய செய்தித் தொகுப்பு...

dogs
dogs

By

Published : Jul 25, 2020, 3:25 PM IST

கரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மனிதர்களை எவ்வளவு இன்னலுக்கு ஆளாக்கியுள்ளதோ அதைவிட அதிகமாகவே நாய்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக தெரு நாய்கள். சென்னையின் தற்போதைய நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கிப்போனதாலும், கடைகள் திறக்கப்படாததாலும் தெரு நாய்கள் உணவின்றி தெருக்களில் பசியுடன் சுற்றித் திரிந்தன. அப்போது அவற்றுக்கு நல்லுள்ளம் கொண்ட சிலர், தன்னார்வ அமைப்பினர் உணவு வழங்கி அன்பு செய்தனர். பசியோடு சுற்றிய தெரு நாய்களுக்கு அரசின் அனுமதி பெற்று வாகனங்களில் எடுத்துச் சென்று உணவு வழங்கியதாகத் தெரிவிக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த ப்ளூ கிராஸ் அமைப்பினர்.

அரசின் அனுமதி பெற்று வாகனங்களில் எடுத்துச் சென்று உணவு வழங்கினோம்

அனைத்துத் தெரு நாய்களையும் கண்டறிந்து இந்த அமைப்புகளால் பசியாற்றுவது சாத்தியமில்லாதது. அந்தக் காலகட்டங்களில், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களே, அவற்றை அரவணைத்த நெகிழ்வான நிகழ்வுகளும் நடந்துள்ளன. திருவொற்றியூரில் கூலி வேலை செய்யும் சாமுண்டீஸ்வரி என்ற பெண், தனது சொற்ப வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு, அப்பகுதி நாய்களுக்கு இரு வேளை உணவளித்துவருகிறார். அவருக்காக வழக்கமான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குவியும் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள், சாமுண்டீஸ்வரியைக் கண்டவுடன் பற்றிக்கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

’நாய்களுக்கு சோறு வைக்காமல் நாளே முடியாது’

ஊரடங்கில் அடங்கிப்போன பலரது வாழ்வில் இன்னும் மீதமிருப்பது இம்மாதிரியான ஆதரவற்ற உயிரினங்கள் மீது செலுத்தும் அன்பு மட்டும்தான்.

இதையும் படிங்க: மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த ஆண்யானை!

ABOUT THE AUTHOR

...view details