சென்னை: எர்ணாவூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் சகோதரர் அஜித்குமாருக்கும், எண்ணூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொய் வழக்குகள் பதிவு செய்ததால் அஜித்குமார், வீட்டை விட்டு திடீரென மாயமானார்.
அவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயனும், காவலர் சந்தானகிருஷ்ணனும் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும், தட்டிக்கேட்ட தன்னை சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சட்டவிரோத காவலில் எடுத்து தாக்கியதாகவும், அதில் தனது கண்ணில் படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறி எழிலரசன், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.