தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நவ.9இல் வெளியீடு! - துணைத் தேர்வு முடிவுகள்

பதினொன்றாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத் தேர்வு முடிவுகள்
துணைத் தேர்வு முடிவுகள்

By

Published : Nov 3, 2021, 3:34 PM IST

சென்னை: இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "11ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதியவர்களின் முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக நவம்பர் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், துணைத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details