தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு' - அமைச்சர் சேகர்பாபு தகவல்.

ஒரு முறை கூட தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்களின் பட்டியலை தயார் செய்து, வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

By

Published : May 16, 2021, 1:08 PM IST

சென்னை:எழும்பூரிலுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் செறியூட்டி வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆகியோர் பார்வையிட்டு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "இன்று(மே.16) எழும்பூரில் தனியார் பள்ளியில் 104 ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கபட்டுள்ளது. இங்கு மருத்துவ வசதி, மருத்துவர்கள் செலவு, மேல் சிகிச்சைக்கு நோயாளிகளை அனுப்ப ஆம்புலன்ஸ், 7 மருத்துவர்கள், 24 செவிலியர்கள் 24 மணி நேரமும் செயல்படுவார்கள்.

சென்னையில் படுக்கைப் பற்றாக்குறையைக் குறைக்க லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம் மற்றும் பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க உள்ளோம். எங்கெல்லாம் பிரச்னைகள் கவனத்திற்கு வருகிறதோ, அங்கு ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அதனை சரி செய்து வருகிறோம்.

மயானங்களில் மாநகராட்சி ஆணையர் நேற்று(மே.15) ஆய்வு மேற்கொண்டார். விரைவில் மாயானங்களில் உள்ள சிக்கல்கள் களையப்படும். இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர்களின் பட்டியலைத் தயார் செய்து வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, "சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று(மே.16) 20,000 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்று (மே.16) ) 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் 40 சதவிகிதம் அளவுக்குத் தான் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள்" என்றார்.

இதையும் படிங்க:'சுதந்திரத்துக்குப் பின் நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா' - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details