சென்னை:வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் டயரில் வீல் கேப் பொருத்தப்படாததை வைத்துத் துப்பு துலக்கியதாக காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களாக ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக பிரமுகரான ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான 3 காரை பயன்படுத்தித் தப்பிப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் தெரியவந்தது.