பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பைத் தொடர்ந்து உலக நாடுகளின் கண்கள் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நோக்கித் திரும்பியுள்ளது. புராதன சிறப்புவாய்ந்த மாமல்லபுரம், மகாபலிபுரம் என்றும் இருவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த இரு பெயர்களுக்கான காரணம் குறித்து இங்கே பார்க்கலாம்.
பல்லவ மன்னர் மகேந்திர வர்மனுக்கு பிறகு கி.பி. 630ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் நரசிம்ம வர்மன். பல வெற்றிகளைக் குவித்த நரசிம்மன் மல்யுத்தத்தில் சிறந்த வீரர்.
இவரை மல்யுத்தத்தில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. இதனால் அவருக்கு மாமல்லன் என்ற பெயர் வந்தது. மல் என்றால் வலிமை என்று பொருள். அந்த வகையில் மகா வலிமையுடன் இருந்ததால், நரசிம்மன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். அவரின் பெயரைத் தழுவியே அந்த ஊருக்கு மாமல்லபுரம் என்ற பெயர் உருவானது.
மகாபலி மன்னரின் நினைவைகூரும் விதமாக, மாமல்லபுரத்தில் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்படடுள்ளது. அந்த சிற்பத்தின் பெயராக, மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.