தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நால்வர்! - மேற்கூரை விழுந்து விபத்து

சென்னை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

break
break

By

Published : Mar 9, 2020, 6:58 PM IST

சென்னை - திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி, பழமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது. கூலித் தொழிலாளியான பாபு, தனது மனைவி கோமதி, மகன், மகளுடன் அவ்வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாபு மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேல் சுவரின் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் குடும்பத்தினர் அனைவரும் காயமடைந்தனர். பின்பு அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிகழ்வு குறித்து திருவொற்றியூர் காவல் உதவி ஆய்வாளர் சுஃபான் மற்றும் காவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கூரை பெயர்ந்து நல்வாய்ப்பாக காயங்களுடன் நால்வர் உயிர்தப்பிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நால்வர்!

இதையும் படிங்க: ராஜஸ்தானில் பெட்ரோல் ஊற்றி வாகனம் எரிப்பு: இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details