வியாழக்கிழமை (ஏப்.14) மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால், 12 ராசிகளுக்குமான சூரிய சஞ்சரிப்பு பலன்களும், பரிகாரங்களும் குறித்து காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்குள் சூரியன் நுழைவதால், இந்த மாதம் நீங்கள் தேவையில்லாமல் பெருமை பேசுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கண் சம்பந்தமான சில பிரச்சினைகள் வரலாம். அதிக சூரிய ஒளியில் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம் - சூர்ய அஷ்டகத்தை பாராயணம் செய்யவும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள். இருப்பினும், உங்கள் போட்டியாளர்களின் மூலமே நீங்கள் பயனடைவீர்கள். நோயிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. இருப்பினும், வெளிநாட்டு நிலம் தொடர்பான வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் - தினமும் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கியபிறகு உங்கள் வேலையைச் செய்யத் தொடங்குங்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வழக்கத்தை விட சிறப்பாகவே இருக்கும். ஏதேனும் தடைபட்டிருந்த அரசுப் பணியை இப்போதே செய்து முடிப்பீர்கள். நீங்கள் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள்.
பரிகாரம் - தினமும் சூரிய நமஸ்காரம் செய்து அர்ச்சனை செய்யுங்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், நிலம் மற்றும் சொத்து சார்ந்த வேலைகளில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்வது நல்லது.
பரிகாரம் - சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்து சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இன்பம், துன்பம் கலந்த கலவையான பலன்களே கிடைக்கும். பயணத்தின்போது கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பது நல்லதல்ல. உங்கள் சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
பரிகாரம் - ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை ஓதவும்.
கன்னி: சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதால் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு பெரிய திட்டத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது.