பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முரளி (28) அருகில் உள்ள தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் முரளியை சரமாரியாக வெட்டினர்.
சாதி மறுப்புத் திருமணம்: இளைஞர் வெட்டிக் கொலை - ilavarasan divya
சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முரளி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ள நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து கொலையாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.