சென்னை: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து நாளை(நவ.18) தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை (Heavy Rain) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Holiday for schools: தமிழ்நாட்டில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு நவ.18ஆம் தேதி விடுமுறை - காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு(Holiday for schools) நவ.18ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain
குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Heavy Rain Alert: இன்று இரவு முதல் நாளை இரவு வரை சம்பவம் இருக்கு மக்களே - தமிழ்நாடு வெதர்மேன்
Last Updated : Nov 18, 2021, 4:51 PM IST