சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, இன்று(நவ.12) மழை காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ராணிபேட்டை, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.