தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களின் மனங்களில் வாழ்கிறார் எஸ்.பி.பி - இந்து முன்னணி இரங்கல் - எஸ்.பி.பி மறைவு

சென்னை: 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் எஸ்.பி.பி. வாழ்கிறார் என அவரது மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது.

condolences
condolences

By

Published : Sep 26, 2020, 1:06 PM IST

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ தனது வாழ்நாளில் திரைப்படப் பாடல்கள், பக்தி இன்னிசை பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி. அண்ணாமலையாரை போற்றி அவர் பாடிய பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அதனை கேட்காத தமிழ் உள்ளங்களே இல்லை.

பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பி. அவர்கள் 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார். எஸ்.பி.பி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது திரை உலகம் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் மூலம் அவர் மீது மக்கள் அனைவரும் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

அன்னாரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘எதைச் சொல்லி உங்கள் இழப்பை ஈடுசெய்யப் போகிறேன்’ - மைக் மோகன் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details