சென்னை:சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'சூரரைப் போற்று'. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்! - Soorarai Potru Hindi remake shoot started
அக்ஷய் குமார் நடிப்பில் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சூரரை போற்று இந்தி ரீமேக் தொடங்கியது!
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஜிவி.பிரகாஷின் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இந்நிலையில் இப்படத்தை இந்தியில் இயக்குகிறார், சுதா கொங்கரா. இதில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். மேலும் ராதிகா மந்தன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை விக்ரம் மல்கோத்ராவுடன் இணைந்து தனது 2டி நிறுவனத்தின் மூலம் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:இந்தியில் ரீமேக்காகும் 'ஓ மை கடவுளே'