தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திரிசூலம் மலையில் திடீர் தீ! - திரிசூலம் மலை

சென்னை: விமான நிலையம் எதிரில் உள்ள திரிசூலம் மலையில் பற்றிய திடீர் தீயால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

fire
fire

By

Published : Feb 7, 2020, 5:45 PM IST

சென்னை விமான நிலையம் எதிரே உள்ளது திரிசூலம் மலை. மலையடிவாரத்தில் திரிசூலம் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த மலையடிவாரப் பகுதியில்தான் ராணுவத்தினர், காவல் துறையினர், தொடர் வண்டி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடுவர்.

இந்நிலையில், திரிசூலம் மலைப்பகுதியில் இன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்ததும் வனத்துறையை தொடர்பு கொண்ட மீனம்பாக்கம் காவல் துறையினர், தீ குறித்து எடுத்துக் கூறினர். மலையில் பற்றிய திடீர் தீ குறித்து காவலர்கள், அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, கோடை காலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தீப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

வெயிலின் தாக்கத்தால் தீ பற்றியதா, அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திரிசூலம் மலையில் திடீர் தீ!

திரிசூலம் மலைத் தீ காரணமாக அங்குள்ள செடிகொடிகள் மற்றும் சிறிய மரங்கள் தீயில் கருகி, அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இதையும் படிங்க: ரயில் படிக்கட்டில் தூங்கிய இளைஞர் - தண்டவாளத்தில் விழுந்து உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details