சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை; ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் - தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடநூல்களில் பகவத் கீதை இடம்பெறுவது குறித்து ஆய்வு செய்தபின் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகனிடம், பிகில் பட இசை வெளியீட்டு விழா குறித்து கேள்வியெழுப்பியதற்கு, ”ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சி நடந்தபின், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிகள் அனுமதி தரக்கூடாது என்று எல்லா கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தோம்” என்றார்.
மேலும், பகவத் கீதை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடநூல்களில் இடம்பெறுவது குறித்து கேட்டதற்கு, அது தொடர்பாக முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று பதிலளித்தார்.
TAGGED:
கே பி அன்பழகன்