தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்குக்குப் பின் செமஸ்டர் தேர்வுகள் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை‌! - கல்லூரிகள்

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில், ஊரடங்குத் தளர்வுக்குப் பின் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

education
education

By

Published : May 13, 2020, 7:41 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய கல்லூரித் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வு தேதி எப்போது அறிவிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஊரடங்கு தளர்வுக்குப் பின் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம்; பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details